ஜி ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக எதிர்ப்பு? – சீன கம்யூனிஸ்ட் மாநாட்டிலிருந்து முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோ வெளியேற்றம்

பெய்ஜிங்: ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 16-ம்தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் கட்சி நிர்வாகிகள் 2,300 பேர் கலந்து கொண்டனர். இறுதி நாளில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார். அவரே அதிபராகவும் தொடர்வார். சீன அரசியலமைப்பு சட்டத்தின்படி, அதிபர் 10 ஆண்டு காலம் மட்டுமேபதவி வகிக்க முடியும். அதன்படி அதிபர் ஜி ஜின்பிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைகிறது. ஆனால், அதிபர் பதவிக்காலத்தின் கால வரம்பு கடந்த 2018-ம் ஆண்டு நீக்கப்பட்டது.

அதன்படி மாநாட்டின் இறுதி நாளான நேற்று, அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக பொதுச்செயலாளராக தேர்ந் தெடுக்கப்படுவார் என எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில் இறுதி நாள் கூட்டத்தில் பங்கேற்க, கட்சி நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அதிபர் ஹூஜின்டாவோ (79) வழக்கம்போல்வந்து அதிபர் ஜி ஜின்பிங் கின்இடதுபுறம் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த உதவியாளர்கள், ஹூ ஜின்டாவோவின் கையைப் பிடித்து தூக்கி வெளியேறும்படிகூறினர். அவர் சோகத்துடன் வெளியேறினார்.

அப்போது அவர் அதிபர் ஜி ஜின்பிங்கிடமும், பிரதமர் லீ கேகியாங்கிடமும் ஒரு நிமிடம் பேசிவிட்டு சென்றார். வெளியேறும் போது தனது மேஜையில் இருந்த தாள்களை ஹூ ஜின்டாவோ எடுக்கமுயன்றார். ஆனால் அதை எடுக்கவிடாமல், மேஜை மீது தாள்களைஅழுத்தி அதிபர் ஜி ஜின்பிங் பிடித்துக் கொண்டார். முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோ வெளியேறும்போது, அதிபர் ஜி ஜின்பிங்கின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

ஒரு வாரமாக நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்துக்குள் பத்திரிகையாளர்கள் யாரும்அனுமதிக்கப்படவில்லை. ஆனால்,மாநாட்டின் நிறைவு நாள் என்பதால், நேற்று மட்டும் இந்த மாநாடுநடந்த கிரேட் ஹால் அரங்குக்குள் பத்திரிகை யாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது இந்த சம்பவம் நடந்ததால், முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோ வெளியேற்றப்படும் காட்சிகளை பத்திரிகையாளர்கள் படம் பிடித்தனர்.

ஹூ ஜின்டாவோ வெளியேற்றப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த சம்பவம் அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக பொதுச் செயலாளராக தேர்ந் தெடுக்கப்படுவதற்கு முன்பாக நடந்தது.

இதுகுறித்து சீன அரசியல் நிபுணர் நீல் தாமஸ் கூறுகையில், ‘‘அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கு, ஹூ ஜின்டாவோ எதிர்ப்பு தெரிவித்தாரா இல்லையாஎன தெரியவில்லை துரதிருஷ்டவசமாக ஹூ ஜின்டாவோ வெளியேற்றப்பட்டுள்ளார்’’ என்றார்.

இச்சம்பவம் நடந்தவுடன் ஹூஜின்டாவோவின் ட்விட்டர் உட்படஇணையதளங்களில் அவரை பற்றிதேடப்படும் தகவல்கள் சீன அரசின்நிபுணர்களால் கடுமையாக சென்சார் செய்யப்பட்டன.

முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோ வெளியேறும்போது, அதிபர் ஜி ஜின்பிங்கின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.