சமீப காலமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் சூழலில் நேற்று ஆபரணத் தங்கம் திடீரென உச்சத்தை அடைந்தது. பெண்களுக்கு தங்கத்தின் மீது ஆசை இல்லை மிகுந்த பேராசை.
அதிலும் குறிப்பாக தமிழக பெண்களுக்குத்தான் மோகம் சற்று அதிகம். தென் இந்தியாவிலேயே அதிக தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.
அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 75 ரூபாய் உயர்ந்து 4,740 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 37,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அந்த வகையில் இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் அதிகரித்து 4,748 ரூபாய்க்கும் சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 37,928 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ஒன்றிற்கு 63.20 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 63,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லை.