'நிறைய பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுங்கள்' – அண்ணாமலை வாழ்த்து

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே பண்டிகையை பலரும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், மாலை 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இந்த நிலையில், தமிழக மக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வெடிக்குமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். அதுகுறித்து பேட்டியில் அண்ணாமலை பேசியது: பட்டாசு வெடிபப்து இந்தியாவின் கலாசாரம். அதை முற்றிலுமாக ஒழிக்கவே முயற்சிக்கின்றனர். பட்டாசு வெடிக்க தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பெரிய பெரிய வழக்கறிஞர்களை வைத்து வழக்கு நடத்தினார்கள்.

அதற்கு பல லட்சங்களை செலவழித்தனர். நான் தமிழர்களை மக்களுக்கு ஒன்றை சொல்கிறேன், அனைவரும் மிக பெரிய அளவில் பட்டாசுகளை வாங்கி வெடியுங்கள். சிவகாசியில் லட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். மனதில் பாரம் இல்லாமல் வாழத்தான் இது போன்ற பண்டிகைகள் இருக்கின்றன. குற்றம், குறைகளை மறந்து உறவினர்களின் வீடுகளுக்கு சென்று வாருங்கள் என கூறிய அண்ணாமலை தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.