மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள ராமரெட்டியூரை சேர்ந்தவர் பிரபாகரன்(31). ரயில்வே பாயின்ட்ஸ் மேன். பவிதாரணி என்கிற மனைவியும், 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 20ம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 7.15 மணியளவில் பணியில் இருந்தபோது பிரபாகரன் திடீரென மயங்கி விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை ஜோலார்பேட்டை ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரபாகரன் மூளைச்சாவு அடைந்தார். இதனால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் எடுத்து பெங்களூரு, சென்னை, கோவை பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.