தமிழக தொலை தொடர்பு துறையில் வேலை – முழு விவரம்

தொலை தொடர்பு துறையில் துணைப்பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் தொலைத்தொடர்பு பொறியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு:

விண்ணப்பத்தின் இறுதி தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது யுஜிசி யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / டெலிகம்யூனிகேஷன் / ஐடி / இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகியவற்றில் பி.இ/ பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35, 400 முதல் ரூ.1, 42,400வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://dot.gov.in/sites/default/files/TN%20LSA_0.pdf?download=1 என்ற தளத்தில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.11.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.