தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் அதிக வருவாயை ஈட்டி வருகிறது. நாள்தோறும் டாஸ்மாக் சில்லறை கடைகள் மூலம் சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் மது வகைகள் விற்பனையாகின்றன.
டாஸ்மாக் கடை நாளை விடுமுறை என்றால் அதற்க்கு முந்தைய நாள் நடக்கும் மது விற்பனை பெரும் உச்சம் என்று சொல்லலாம். இதில், பொங்கல், தீபாவளி வருடப்பிறப்பு உள்ளிட்ட விசேஷ நாட்களில் மது விற்பனை டார்கெட் வைத்து உச்சத்தை தொடுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடம் தீபாவளி பாண்டியை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்.22-ம் தேதி
சென்னை-ரூ. 38.64 கோடி,
திருச்சி – ரூ. 41.36 கோடி,
சேலம் – ரூ. 40.82 கோடி,
மதுரை ரூ. 45.26 கோடி,
கோவை ரூ. 39.34 கோடி என மொத்தமாக ரூ. 205.42 கோடிக்கு மது விற்பனை
அக்.23-ம் தேதி
சென்னை-ரூ. 51.52 கோடி,
திருச்சி – ரூ. 50.66 கோடி,
சேலம் ரூ. 52.36 கோடி,
மதுரை ரூ. 55.78 கோடி,
கோவை-ரூ. 48.47 கோடி என மொத்தமாக ரூ. 258.79 கோடிக்கு மது விற்பனை
இன்றைய விற்பனையை சேர்த்தால் 750 கோடி ரூபாயை தூண்டவும் வாய்ப்பு உள்ளது. உலக ஆண்ட தமிழன், இன்று அரசாங்கத்தாலும், சினிமாத்துறையின் ஊக்குவிப்பாலும் மது போதையில் திளைத்து கொண்டி இருக்கிறான் என்பதையே இது காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் மனம் குமுறி கொண்டிருக்கின்றனர்.