புதுடெல்லி: ஆயுர்வேதம் இந்தியாவின் பண்டைய பாரம்பரியமாக விளங்குவதாக மத்திய பழங்குடியினர் நல விவகார துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா நேற்று தெரிவித்தார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற 7-வது ஆயுர்வேத தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறிய தாவது:
இந்தியாவின் பழமை மிகுந்தபாரம்பரியமாகவும், செல்வமாகவும் ஆயுர்வேதம் விளங்குகிறது. அறிவியலாக உள்ளது. காடுகளில் வாழும் மக்களுடன் இணைந்து ஆயுர்வேதத்தை வளர்த்தெடுக்கலாம். ஆயுர்வேதம் மட்டுமே நோயைத் தடுப்பது குறித்த அறிவியலாக உள்ளது. மாறாக அது நோய்வாய்ப்பட்ட சிகிச்சை அளிப்பதற்கான அறி வியல் அல்ல.
ஆயுர்வேதம் என்பது ஒரு பழங்கால பாரம்பரியமான அறிவு.எனவே, அந்த துறையில் கவனிக்கத்தக்க வகையிலான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.உலக அளவில் ஆயுர்வேதம் தற்போது 30 நாடுகளால் அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் துறையின் தற்போதைய சந்தை மதிப்பு 1,810 கோடி டாலராகும் (ரூ.1.50 லட்சம் கோடி).
இவ்வாறு மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறினார்.