நரகாசுரர் தமிழ் பேரரசரா? வீரவணக்கம் செலுத்த மறந்த சீமான்!

இந்து தொன்மவியலின் படி விஷ்ணுவின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்த நரகாசுரன் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியவர். அதன் காரணமாக விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை கொன்றதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

நரக புராணக்கதை வரலாற்றில் அசாம் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது. இதில் குறிப்பாக காமரூபா பகுதியில் வரலாற்று காலங்களில் ஆட்சி செய்த மூன்று வம்சங்களின் முன்னோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. குவகாத்திக்கு அருகிலுள்ள ஒரு மலைக்கு நரகாசுரன் பெயரிடப்பட்டது. நரகாசுரன் இந்து சமய நம்பிக்கையுடனும் தொடர்புடையவர் என்பதும், இந்துக்களின் வழிபாட்டுத் தளமான காமக்கியாவில் உள்ள சக்தி தெய்வத்தை வணங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குளித்தலை கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி தம்பிகள் நரகாசுரனுக்கு புகழ் வணக்கம் செலுத்தி பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் நரகாசுரன் பெயர் காரணத்தையும் குறிப்பிட்டுள்ளனர். சுரா என்றால் மது அருந்துபவர் என்றும், அசுரர் என்றால் மது அருந்தாதவர் என்றும், நரகன் என்றால் மனிதன் என்றும், நரகாசுரன் என்றால் மது அருந்தாத மாமனிதன் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இதன் மூலம் நரகாசுரன் மது அருந்தாத மாமனிதன் என்பதை விளக்கியுள்ளனர்.

 மேலும் “வடவரின் ஆதிக்கத்தை தகர்த்து தமிழர் நலன் காத்த தமிழ் பேரரசன் மாமன்னர் நரகாசுரனுக்கு வீர வணக்கம்” என கொட்டை எழுத்தில் பேனர் வைத்துள்ளனர்.  நாம் தமிழர் கட்சியினர் அந்த பேனரில் “ஒழுக்கமே உருவான ஒருவனை ஒழுக்கமற்ற ஒருவன் கொன்ற கதை தான் தீபாவளி… இன்று நரகசுரன் நினைவு நாள்… கொண்டாடலாமா தமிழர்களே சிந்திப்பீர்…” என தமிழர்களுக்கு ஒழுக்கமான எண்ணங்களை தூண்டும் வகையில் நரகாசுரன் புகழைப் பாடியுள்ளனர். 

நாம் தமிழர் கட்சி தம்பிகள் குறிப்பிட்டுள்ள வடவர் கிருஷ்ணருக்கு கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஜெயந்தி விழா எடுத்த அண்ணன் சீமான் அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். ஆனால் தமிழர் நலம் காத்த தமிழ் பேரரசன் நரகாசுரனுக்கு ஏனோ வீரவணக்கம் செலுத்த மறந்து விட்டார். வடகருக்கு ஜெயந்தி விழா எடுத்த அண்ணன் சீமான் தமிழ் பேரரசிற்கு ஏன் புகழ் வணக்கம் செலுத்தவில்லை என நாம் தமிழர் கட்சி தம்பிகள் தான் கேட்க வேண்டும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.