புதுடில்லி ;’டுவிட்டர்’ நிறுவனத்தை வாங்கும்பட்சத்தில், அந்நிறுவனத்தின் 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக, உலகின் மிகப் பெரிய பணகாரரான எலான் மஸ்க் கூறியதற்கு, டுவிட்டர் ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.மேலும், அச்சுறுத்தல்கள்நிறைந்த சூழலில் வேலை செய்ய முடியாது என்றும் கடிதத்தில்
தெரிவித்துள்ளனர்.
எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 3.65 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எலான் மஸ்க், 75 சதவீத டுவிட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய விரும்புவதாக, செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, டுவிட்டர் ஊழியர்கள் ஒரு திறந்த மடலை அவருக்கு எழுதி உள்ளனர்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:பணிநீக்கம் செய்ய இருப்பதாக கூறுவது, பொது உரையாடலுக்கு சேவை செய்து வரும் டுவிட்டர் ஊழியர்களை காயப்படுத்துவதாக
உள்ளது. இது பொறுப்பற்ற தனம். மேலும், வாடிக்கையாளர்களையும் பயனர்களையும் குறைத்து மதிப்பிடுவதாகும்.
தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் நிறைந்த சூழலில், எங்களால் எங்களுடைய வேலையைச் செய்ய முடியாது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், எலான் மஸ்க் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான, கருத்தியல் இடைவெளியையும் இக்கடிதம் உணர்த்துவதாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement