குளத்தூர்: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலட்சுமணன். இவரது மகன் பூபதிராஜா (27). டிப்ளமோ படித்து விட்டு தனியார் பவர் பிளான்டில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஆன்லைன் ரம்மியில் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்படுவதற்கு முன் ஆன்லைன் ரம்மியில் விளையாடியதில் அதிகமான பணத்தை இழந்த பூபதிராஜா, கடந்த சில நாட்களாக சோகமாகவே சுற்றி திரிந்துள்ளார். இதையறிந்து பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பூபதிராஜா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். தகவலறிந்த குளத்தூர் போலீசார், பூபதிராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
