தமிழகத்திற்கு அதிக வருவாயை ஈட்டி தருவது டாஸ்மாக் தான். அதிலும் குறிப்பாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய நாள் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை மிக அமோகமாக நடைபெறும்.
அந்தவகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘டாஸ்மாக்’ கடைகளில் விற்பனையாகும் மதுபானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டு முறியடிக்கப்படுவது வழக்கம் ஆகும்.
அதன் படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மூன்று நாட்களாக மது விற்பனை செய்யப்பட்டுவந்தது.
இதற்கிடையே தமிழகத்தில் அக். 22 ம் தேதி ரூ. 205.42 கோடிக்கும், அக். 23 ம் தேதி 258.79 கோடிக்கும் விற்பனையானதாக பரபரப்பு தகவல் வெளியானது. டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் இந்த தகவல் வெளியாகியிருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் ரூ.244.08 கோடிக்கு மது விற்பனையாகியள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று தினங்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.708.29 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.154 கோடி,.
திருச்சி மண்டலத்தில் ரூ.140 கோடி,
சேலம் மண்டலத்தில் ரூ.142 கோடி,
சென்னை மண்டலத்தில் ரூ.139 கோடி,
கோவை மண்டலத்தில் ரூ.133 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது. வெளியான இந்த தகவல் உண்மை அல்ல என்று அமைச்சர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.