தனியாக சென்ற பெண்கள் கொடூர கொலை! நபர் அளித்த பகீர் வாக்குமூலம்


வன விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்த பால்ராஜ்


இரவில் தனியாக சென்ற இரண்டு பெண்களை கொடூரமாக தாக்கி கொலை செய்த பால்ராஜ் கைது

தமிழக மாவட்டம் அரியலூரில் இரவு வேளையில் தனியாக சென்ற பெண்கள் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய பாளையத்தைச் சேர்த்தவர்கள் கண்ணகி, மலர்விழி.

இவர்கள் இருவரும் கடந்த 22ஆம் திகதி தைல மரக் காட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர்.

அவர்கள் இருவரும் காளான் பறிக்க சென்றபோது கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கழுவன்தொண்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே பொலிஸார் அவரைப் பிடித்து விசாரித்தனர்.

தனியாக சென்ற பெண்கள் கொடூர கொலை! நபர் அளித்த பகீர் வாக்குமூலம் | Two Women Brutely Murdered Ariyalur

அப்போது, வன விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்த பால்ராஜ், கடந்த 22ஆம் திகதி தனியாக இரண்டு பெண்கள் தைல மரக்காட்டுக்குள் செல்வதை பார்த்துள்ளார்.

அவர்கள் காளான் பறித்துக் கொண்டிருந்த சமயத்தில் பால்ராஜ் தான் வைத்திருந்த சுளுக்கியால் குத்தியும், இன்னும் வேட்டை ஆயுதங்களை பயன்படுத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

தனியாக சென்ற பெண்கள் கொடூர கொலை! நபர் அளித்த பகீர் வாக்குமூலம் | Two Women Brutely Murdered Ariyalur

பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகளை யும், செல்போன்களையும் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின்னர் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.