ஸ்டாலின் எடுத்த ஸ்மார்ட் முடிவு… முதல்வரை வெகுவாக பாராட்டிய அண்ணாமலை!

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில் ஜமேசா முபின் என்ற நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தற்கொலைப் படை தாக்குதலுக்கான முயற்சிதான் எனக் கூறிவந்த தமிழக பாஜக, இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் மெளனம் சாதித்து வருகிறார்? சம்பவ இடத்துக்கு அவர் ஏன் நேரில் செல்லவில்லை? என்று அவர் மீது விமர்சன கணைகளை தொடுத்து வந்தது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கோவையில் காரில் சிலிண்டர் வெடிதத விவகாரம் குறித்த வழக்கை NIA விசாரிக்க பரிந்துரைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

‘கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதையும் கருத்தில்கொண்டு இவ்வழக்கை NIA-க்கு மாற்ற பரிந்துரைக்கப்படும்.மாநிலத்தின் பொது அமைதி, சட்டம்-ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் செயல்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த முடிவை வரவேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். ‘கோவை தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை @BJP4TamilNadu வரவேற்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் பதவி ஏற்கும் போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் என்ற உறுதிமொழியை அளித்தீர்கள்.மேல் குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம். தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் @BJP4TamilNadu உறுதுணையாக இருக்கும்’ என்று அண்ணாமலை தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.