மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் வசித்து வருபவர் பழனி இவரது மகன் தினேஷ். இவர் தீபாவளி அன்று வீட்டின் அருகில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துள்ளான். அப்போது காரைக்கால் நோக்கி சென்ற கார் ஒன்று அவர் மீது அதிவேகத்தில் மோதியுள்ளது.
இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ மூலம் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.