கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகையில், பொள்ளாச்சி கால்வாய் ”அ” மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ”ஆ” மண்டலம் சேத்துமடை கால்வாய் ”அ” மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டு கால்வாய் ”அ” மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 முடிய உள்ள 120 நாட்கள் பாசன காலத்தில் மொத்தம் 75 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு, ஆழியாறு அணையிலிருந்து 2400 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களிலுள்ள 22116 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
