இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு குற்றவாளியை சந்தித்த கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான நபர்! முக்கிய தகவல்


இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு குற்றவாளியை சந்தித்த கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான ஃபெரோஸ்.

பொலிஸ் விசாரணையில் கூறிய தகவல்.

இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு குற்றவாளியை சந்தித்ததாக கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான ஃபெரோஸ் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். கார் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட இந்த தற்கொலை படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் இலங்கையையே உலுக்கியது. இலங்கையில் நடைபெற்ற இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் பின்னணியில் ஜக்ரன் ஹசீம் என்ற பயங்கரவாதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு குற்றவாளியை சந்தித்த கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான நபர்! முக்கிய தகவல் | Coimbatrore Car Bomb Blast Investigation

இந்த நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான ஃபெரோஸ் கேரளா சிறையில் உள்ளவர்களை சந்தித்தது விசாரணையில் அம்பலமானது. என்.ஐ.ஏ. வால் கைதாகி சிறையில் உள்ள ரசித் அலி, முகமது ஆசாருதீன் உள்ளிட்டோரை ஃபெரோஸ் சந்தித்துள்ளார்.

2019-ல் இலங்கை தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதின் கைதனார். தனிப்படை பொலிஸ் நடத்திய தீவிர விசாரணையில் ஃபெரோஸ் கேரளா சென்றது தெரிய வந்துள்ளது. சிறையில் ரசித் அலி, அகமது அசாருதீனுடனான சந்திப்பின் நோக்கம் குறித்து ஃபெரோஸிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.