வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் பல்வேறு ஆண்டறிக்கைகள் ஆராய்வு

வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் ஆறு வருடாந்த அறிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன.

கூட்டுறவு மொத்தவிற்பனை நிறுவனத்தின் 2017-2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த கணக்கறிக்கை, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் 2016 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டுக்கான தராதர அங்கீகார சபையின்  2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் என்பன இவற்றில் உள்ளடங்குகின்றன.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து குறிப்பிடுகையில், மறைந்த அமைச்சர் கௌரவ லலித் அத்துலத்முதலி ஆரம்பித்த நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பாடசாலைகளுடன் இணைந்து மாதாந்தம் மஹாபொல கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சிகளை நடாத்தும் முயற்சி கடந்த சில வருடங்களாக செயற்படுத்தப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில் இவ்வருட இறுதிக்கு முன்னர் இந்த முயற்சியை மீண்டும் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்கான காலம் கனிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.