மட்காத கழிவுகளிலிருந்து அழகு சாதனப் பொருட்கள் – பள்ளி மாணவ மாணவிகள் அசத்தல்.!

தேனி மாவட்டத்தில் மட்காத கழிவுகளில் இருந்து அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களை தயாரித்து பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் கழிவுகளை பிரித்து வழங்குவது குறித்தான தேசிய அளவிலான இயக்கத்தின் கீழ், வீடுகளில் உருவாகும் மட்காத கழிவுகளில் இருந்து பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அழகு பொருட்கள் தயாரிக்கும் போட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகராட்சி தலைவர் ராஜ ராஜேஸ்வரி சங்கர் தலைமையில் நடத்தப்பட்டது.
image
இந்த போட்டிகளில் போடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு மட்காத குப்பைகளில் இருந்து அழகு சாதனப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை தயாரித்தனர்.
image
இந்த போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
image
இந்நிகழ்வில் நகர்மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன், நகராட்சி பொறுப்பு ஆணையாளர் செல்வராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.