
விஜய்யை யாராலும் அடிச்சுக்க முடியாது : வம்சி
தெலுங்கில் பிருந்தாவனம், எவடு, ஊப்பிரி, மகரிஷி போன்ற படங்களை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. இவர் தற்போது விஜய் நடிப்பில் பொங்களுக்கு திரைக்கு வரவுள்ள வாரிசு படத்தை இயக்கியிருக்கிறார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய் பற்றி சில தகவல்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அதில், விஜய்யை யாராலும் அடிச்சுக்க முடியாது. அவர் இத்தனை உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் நேர்மை, ஒழுக்கம், பேஷன் இந்த மூன்று அவரிடத்தில் உள்ளது. இந்த மூன்றும் ஒருவரிடத்தில் இருந்து விட்டால் அவர்களை யாராலும் அடிச்சுக்க முடியாது. அப்படிப்பட்டவர்தான் விஜய். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் அந்த பேட்டியில் வம்சி பைடி பள்ளி தெரிவித்திருக்கிறார்.