தூத்துக்குடி: கந்தசஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இன்று மாலை 4 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
