புதுடில்லி ;ரிசர்வ் வங்கி, அதன் பணக் கொள்கை குழுவின் சிறப்பு கூட்டத்தை இன்று கூட்ட இருக்கும் நிலையில், வட்டி உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஆர்.பி.ஐ., எனும் ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழுவின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கை மீறி, பணவீக்கம் அதிகரித்து வருவதை அடுத்து, அது குறித்து விவாதிக்கவும்; அரசுக்கு விளக்க கடிதம் அளிப்பதற்காகவும், இந்த கூட்டம் கூட்டப்படுவதாக கூறப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த சிறப்புக்கூட்டத்தின் போது, வட்டி உயர்வும் அறிவிக்கப்படலாம் என்கின்றனர், துறையைச் சேர்ந்த சிலர்.
இது குறித்து, ‘கேப்குரோவ் கேப்பிட்டல்’ நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான அருண் மல்கோத்ரா கூறியதாவது:தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளாக, பணவீக்கத்தை, ரிசர்வ் வங்கி தன்னுடைய இலக்குக்குள் பராமரிக்கவில்லை.எனவே, இது குறித்த அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து, பணவீக்க உயர்வை தடுப்பதற்கான சரியான நடவடிக்கை மற்றும் திட்டங்களை வகுக்க வேண்டிய நிலையில் உள்ளது.அறிக்கையை தயாரிப்பதுடன், இந்த கூட்டத்தில், 25-50 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டியை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிக்கவும் கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement