புதுடில்லி, ‘ஏ.டி. 1’ எனப்படும், ‘பாலிஸ்டிக்’ தடுப்பு ஏவுகணையின் இரண்டாம் கட்ட சோதனை நேற்று வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
நம் ராணுவத்தின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘ஏ.டி. 1’ தடுப்பு ஏவுகணையின் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இந்நிலையில், இதன் இரண்டாம் கட்ட சோதனை, ஒடிசா கடல் பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று நடந்தது.
இதில், அனைத்து விதமான பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தடுக்கும் சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதுபோன்ற தடுப்பு ஏவுகணைகள் உடைய நாட்டின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்த சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement