இலங்கை அணிக்கு இறுதி சுற்றுக்கான எதிர்பார்ப்பு ….

உலகக்கிண்ண ரி20 தொடரில் சுப்பர் 12 குழுவுக்கு உட்பட்ட வகையில் நேற்று (01) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் 6 விக்கெட்களில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன் காரணமாக தமது இறுதி சுற்றுக்கான எதிர்பார்ப்பை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கு இலங்கை அணிக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இலங்கை 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைவாக இலங்கை இந்த இறுதி சுற்றுக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்து 5 ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ள இங்கிலாந்து உடனான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும்.

அப்படி இல்லாத பட்சத்தில் நேற்று (01) இங்கிலாந்துடன் தோல்வியடைந்த நியூசிலாந்து எதிர்வரும் 4 ஆம் திகதி அயர்லாந்து அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை வெற்றி பெற வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.