அவரே ஒரு குரங்கு.. நீங்க கவலை படாதீங்க … அமைச்சர் மனோதங்கராஜ்

தமிழக அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பாஜக சார்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுமார் 60 இடங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றாக கடலூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி கண்டனம் தெரிவித்ததோடு தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள்தான் என்று கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்க மறுத்த அண்ணாமலை செய்தியாளர்களை பார்த்து, ”ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா..? மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.” என்று ஒருமையில் பேசி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது அங்கிருந்த பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதற்கு கடும் கண்டனங்களும் இருந்து வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் மனோதங்கராஜுடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளர்களை விமர்சித்து வருவதை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், அவர் பத்திரிகையாளர்களை குரங்கு என்று சொல்லி இருக்கிறார். அதற்கு பத்திரிகையாளர்கள் வருத்தப்பட்டார்கள். ஆனால், நீங்கள் வருத்தப்படாதீர்கள், சிலர் தங்களை வைத்துதான் மற்றவர்களை ஒப்பிடுவார்கள். அவர் ஒருவேளை அப்படி இருப்பதால் கூட சொல்லியிருப்பார்” என்று அமைச்சர் ஆறுதல் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.