புதுடெல்லி: ஒரே நேரத்தில் 32 பேருடன் பேசுவதற்கான வீடியோ கால் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும், வெறும் குரல் வழியாகவும் தொடர்பு கொண்டு 32 பேரிடம் பேசலாம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் வசதிகளைத் தவிர, 2 ஜிபி வரையிலான கோப்புகளை தங்களது குரூப்பில் இருக்கும் 1,024 சக உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பாக 16 எம்பி வரையிலான கோப்புகளை மட்டுமே பயனாளர்கள் பரிமாறிக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது அது பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, வாக்கெடுப்பில் பங்கேற்கும் மற்றும் சமூகத்தின் அங்கமாக விளங்குவோரில் 5,000 பயனாளர்களுக்கு செய்திகளை ஒலிபரப்பு செய்ய முடியும்.