கடலூர் மாவட்டத்தில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (30). இவரும் முத்துமீனா என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் காளீஸ்வரன் கடலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருவதால் தற்போது கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரில் வசித்து வந்தனர்.
இதையடுத்து காளீஸ்வரன் அடிக்கடி மொபைல் போனில் அதிகளவில் பேசி வந்ததால் மனைவி முத்துமீனாவிற்கும், அவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், முத்துமீனா கோபித்துக் கொண்டு தனது மொபைல் போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு வெளியில் சென்று விட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த காளீஸ்வரன் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காளீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.