வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாபாத்: என்னை திட்டமிட்டு கொல்ல ஆளும் கட்சியினர் சதி செய்தனர். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரி இம்ரான் மெகா பேரணியை துவக்கி உள்ளார். இஸ்லமாபாத் அருகே பேரணி வந்த போது, மர்மநபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் இம்ரானுக்கு வலது காலில் குண்டு காயம் ஏற்பட்டது.
![]() |
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இம்ரான் இன்று வீடியோ வாயிலாக செய்தி வெளியிட்டுள்ளார். அதில் நேற்று நான் நடத்திய பேரணியின் போது ஒரு கண்டெய்னர் மேல் நின்றிருந்தேன். அப்போது மர்மம நபர் துப்பாக்கிசூடு நடத்தியதில் எனது காலில் நான்கு குண்டுகள் பாய்ந்தன.
என்னனை திட்டமிட்டு கொல்ல ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சித்துள்ளனர். விரைவில் வீடியோ ஆதாரம் வெளியிடுவேன்.எனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு இந்த ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு.. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement