பிரித்தானிய ராஜகுடும்பத்தின் எழுதப்படாத விதியை மீறிய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்


வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர், மேலும் ஒரு எழுதப்படாத விதியை மீறியுள்ளார்.

ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் எவரும் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கூடாது என எழுதப்படாத விதி

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் எழுதப்படாத விதியாக அனைத்து உறுப்பினர்களும் கடைபிடிக்கும், பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் விதியை கேட் மிடில்டன் மீறியுள்ளார்.

ஸ்கார்பரோ பகுதியிலேயே தொடர்புடைய சம்பவம் வியாழக்கிழமை நடந்துள்ளது. அத்துடன், வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர், மேலும் ஒரு எழுதப்படாத விதியை மீறியுள்ளார்.

பிரித்தானிய ராஜகுடும்பத்தின் எழுதப்படாத விதியை மீறிய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் | Kate Middleton Breaks Unwritten Rule

@getty

அதாவது, குறித்த நபர் தடையைத் தாண்டி வேல்ஸ் இளவரசியை நெருங்கியதுடன் புகைப்படத்தின் போது கேட் மிடில்டனின் தோள் மீது கையை வைத்துள்ளார்.
முதலில் கேட் மிடில்டனை நெருங்கிய அந்த நபர், அவரது கவனத்தை ஈர்த்ததுடன், புகைப்படம் எடுக்க அனுமதி கோரியதும் தனது கையை கேட் மிடில்டனின் தோள் மீது வைத்துள்ளார்.

பதிலுக்கு கேட் மிடில்டனும் தமது கையை அவர் தோள் மீது வைத்துள்ளார்.
இதுபோன்ற செயல்களுக்கு ராஜகுடும்பத்திற்கு என உத்தியோகப்பூர்வ விதிகள் ஏதும் இல்லை என்றாலும்,
ராஜகுடும்பத்து உறுப்பினர்களை சந்திக்கும் மக்கள் கை குலுக்குவதுடன் முடித்துக்கொள்ள வேண்டும்,
ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் எவரும் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கூடாது என எழுதப்படாத விதிகள் கடைபிடிக்கப்படுகிறது.

பிரித்தானிய ராஜகுடும்பத்தின் எழுதப்படாத விதியை மீறிய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் | Kate Middleton Breaks Unwritten Rule

@getty

ஆனால் பொதுவாக சமீப ஆண்டுகளில் குறித்த விதிகளை இளம் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் கடைபிடிப்பதில்லை என்றே கூறப்படுகிறது.
சார்லஸ் மன்னராக பொறுப்புக்கு வந்த பின்னர், இந்த புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

தற்போதைய வேல்ஸ் இளவரசியான கேட் மிடில்டனே முன்னர் பலமுறை இந்த விதிகளை மீறியுள்ளார்.
ராணியார் காலமான பின்னர், செப்டம்பர் 8ம் திகதி ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் பெரும்பாலான நேரம் பொதுமக்களை சந்திக்கவே செலவிட்டனர்.

பிரித்தானிய ராஜகுடும்பத்தின் எழுதப்படாத விதியை மீறிய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் | Kate Middleton Breaks Unwritten Rule

@getty

அப்போது கேட் மிடில்டன் பலருக்கும் முகம் மலர புகைப்படங்களுக்கு வாய்ப்பளித்தார்.
2009ல் தொண்டு நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், கேட் மிடில்டன் தமது ஆதரவாளர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

2018ல், ஜூனியர் டென்னிஸ் இன்ஸ்டிட்யூட்டின் பணிகளைப் பார்ப்பதற்காக மிச்சமில் உள்ள பாண்ட் தொடக்கப் பள்ளிக்குச் சென்றபோது, கேட் மிடில்டன் ஒரு இளம் மாணவரைக் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.