சென்னை: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படம் குறித்து தயாரிப்பு சங்கத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. நடிகர் விஜயகாந்தின் ‘பேரரசு’ திரைப்பட கதையை தான் அட்லி ஹிந்தியில் படமாக எடுப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உண்மை நிலையை தெளிவுபடுத்த கோரி ‘பேரரசு’ திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் புகார் மனு கொடுத்துள்ளார். நவம்பர் 9-ம் தேதி விளக்கம் அளிப்பதாக சென்னை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
