ஜெ.தீபாவுக்கு குழந்தை பிறந்தது; ஜெயலலிதாவுக்கு அடுத்த வாரிசு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா-மாதவன் தம்பதிக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகலாக குழந்தை இல்லை. இதற்காக இருவரும், தொடர்ந்து சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தீபாவுக்கு வாடகை தாய் மூலமாக சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்து இருப்பதாக இன்று காலை தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இது தொடர்பாக தீபாவை தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்கள் கேட்டபோது குழந்தை பிறந்து இருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் அந்த குழந்தை எப்படி பிறந்தது? என்பதை வெளிப்படையாக சொல்ல தயங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘சுமார் 5 ஆண்டுகள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது எனக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. இதற்கு முன்பு பலமுறை கருத்தரித்த நிலையிலும் குழந்தை பிறப்பதில் சிக்கல் நிலவியது.

இதனால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாமல் இருந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. நானும், குழந்தையும் மருத்துவமனையில் இருக்கிறோம்.

இன்னும் ஓரிரு தினங்களில் என்ன குழந்தை பிறந்து இருக்கிறது? என்று வெளிப்படையாகவே நானும், எனது கணவரும் அறிவிக்க உள்ளோம். பல்லாண்டு காலங்கள் கழித்து குழந்தை பிறந்துள்ளதால் அதை கவனமாக வளர்ப்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறோம்.

எனக்கும், எனது கணவருக்கும் தனிப்பட்ட முறையில் பல்வேறு மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. எங்களது உறவினர்களிடம் கலந்து ஆலோசித்து குழந்தை பிறந்தது தொடர்பான அறிவிப்பை நானே வெளியிடுவேன்.

இது தொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். இவ்வாறு, ஜெயலலிதா அண்ணன் மகளும், மாதவனின் மனைவியுமான ஜெ.தீபா கூறியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.