மொகாதிசு : கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரான மொகாதிசுவில், ஜெனரல் தகபதன் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது.
இங்கு, நேற்று முன் தினம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், ௧௫ அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு, மே மாதம் அதிபர் ஹசன் ஷேக் மொகமுத் தலைமையில், அல் குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் அமைப்பை எதிர்கொள்வது குறித்து, ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதையடுத்து, கடந்த வாரம், மொகாதிசுவில் நடத்தப்பட்ட இரண்டு கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், ௧௦௦ பேர் உயிரிழந்தனர்; ௩௦௦ பேர் காயமடைந்தனர். இச்சம்பவங்களுக்கு, அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு மீது, அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement