2 வயது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட பாத்திரம் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.
மதுரை சிம்மக்கல் மணி நகரைச் சேர்ந்த ஜெகநாதனின் 2 வயது மகள் அஸ்வினி வீட்டில் பாத்திரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, பாத்திரத்தின் உள்ளே தலை மாட்டிக் கொண்டது. அக்கம்பக்கத்தினர் போராடியும் பாத்திரத்தை எடுக்க முடியாததால் தீயணைப்புத் துறையினரின் உதவி கோரப்பட்டது.
அவர்கள் பாத்திரத்தை வெட்டி குழந்தையை மீட்டனர்.