இஸ்லாமாபாத் : நம் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் நெருங்கிய நட்புடன் உள்ளன. பல நாடுகளை இணைக்கும் சாலை திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தின் உய்குரில் இருந்து, பாகிஸ்தானின் கவாடர் துறைமுகத்தை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்படுகிறது.
சீனா – பாகிஸ்தான் பொருளாதார பெருவழிப் பாதை என்ற பெயரில் இந்த திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் சீனாவைச் சேர்ந்தவர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது. சீன தொழிலாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பாக பலமுறை பேசப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் சீனாவுக்கு சென்றிருந்தார். சீன அதிபர் ஷீ ஜிங்பிங் உடனான சந்திப்பின்போது இந்தப் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள் நிலையிலான பேச்சு சமீபத்தில் நடந்தது. இதில், பாகிஸ்தானில் பணியாற்றும் சீன ஊழியர்கள், ‘புல்லட் புரூப்’ எனப்படும் குண்டு துளைக்காத கார்களில் பயணிக்க அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement