ஈரோடு மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி கடந்த இரண்டாம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதை எடுத்து பெற்றோர் இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பெருந்துறை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(26) என்ற இளைஞர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும், அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் தினேஷ்குமாரை கைது செய்த போலீசார், பின்பு ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்தனர்.