கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நேற்றிரவு (06) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சர் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கினார்.
இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த முகாமில் இருந்த 50 முதல் 60 வரையிலான கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து செயற்படுகின்றனர்.