வாரணாசி, உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பு, வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள வாரணாசி நகரில் ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க வேண்டும் என, விஷ்வ வேத சந்தன் சங்கம் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் விசாரணையை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. விரைவு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, நவ., 8ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், விரைவு நீதிமன்ற மூத்த நீதிபதி மகேந்திர பாண்டே விடுமுறையில் இருப்பதால், ஞானவாபி வழக்கில் வரும், 14ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement