தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர்.
அந்த வகையில் படித்த வேலை தேடும் நபர்களுக்கு நாளை மறுநாள் (நவம்பர் 11ம் தேதி) காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்களும் கலந்து கொள்கின்றனர். இதற்கு கல்வி தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு வரை தகுதியுடையவர்கள்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் நபர்கள் நாளை மறுநாள் (நவம்பர் 11ம் தேதி) வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.