அவர்களிடம் தாக்குதல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்! பாகிஸ்தான் குறித்து நியூசிலாந்து கேப்டன் கருத்து


அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளது பாகிஸ்தானின் பலம் – கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து வீரர்கள் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செய்யப்பட்டதாக கேப்டன் வில்லியம்சன் தெரிவித்தார்  

பாகிஸ்தானிடம் அற்புதமான பந்துவீச்சு தாக்குதல் உள்ளது என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் இன்று நடக்கும் உலகக்கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில்,

‘பாகிஸ்தான் அணியிடம் அற்புதமான தாக்குதல் பந்துவீச்சு உள்ளது. அவர்கள் உண்மையிலேயே சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள்.

அத்துடன் அவர்களிடம் அனுபவம் வாய்ந்த வீரர்களும், மேட்ச் வின்னர்களும் உள்ளது பாகிஸ்தானின் பலம்.

அதேபோல் எங்களிடம் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இந்த தொடர் முழுவதும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்’ என தெரிவித்துள்ளார்.

Kane Williamson

நியூசிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட், சௌதீ, பெர்குசன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

அதேபோல் பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அஃப்ரிடி, ரவூஃப், முகமது வசிம் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

அவர்களிடம் தாக்குதல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்! பாகிஸ்தான் குறித்து நியூசிலாந்து கேப்டன் கருத்து | Kane Williamson Said Pak Bowlers Attackers

Getty Images

அவர்களிடம் தாக்குதல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்! பாகிஸ்தான் குறித்து நியூசிலாந்து கேப்டன் கருத்து | Kane Williamson Said Pak Bowlers Attackers  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.