மதுரையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை மாநகர் பா.ஜ.க சார்பில் ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

இந்தி திணிப்பு நடைபெறுவதாக கூறும் அமைச்சர் பொன்முடி சுய பரிசோதனை செய்ய வேண்டும். 2019-ம் ஆண்டு வரை இந்தி 3-வது மொழியாகத்தான் இருந்தது, 2019-ல் தேசிய கல்விக்கொள்கையில் 3-வது மொழி என தேர்வாகியுள்ளது. இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்பதுதான் பிரதமரின் விருப்பம்.
பா.ஜ.க.வின் புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்ற மாற்று பெயரில் பயன்படுத்தப்படுகிறது. பொறியியல் படிப்பில் லட்சத்தில் 69 பேர்தான் தமிழில் பயின்று வருகின்றனர். பாஜக அரசில் இந்தி மொழி திணிப்பு என்பதே இல்லை.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை 24-ம் தேதி மனிதவெடி குண்டு தாக்குதல் என்றேன், குண்டுவெடித்து 54 மணி நேரம் கழித்துதான் பயங்கரவாத தாக்குதல் என கூறினார்கள்.

ஆர்.எஸ்.பாரதி பா.ஜ.கவுக்கு நன்றி சொல்ல வேண்டும். பா.ஜ.க தான் வெடிகுண்டு சம்பவத்தை வெளிக்கொண்டு வந்தது
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மறைத்தது தி.மு.க தான். பாஜக வெளிப்படுத்தாவிட்டால் தி.மு.க அரசு சிலிண்டர் குண்டுவெடிப்பில் இறந்த முபின் குடும்பத்திற்கு அரசு வேலையை கொடுத்திருக்கும்.
மதுரையில் மகளிர் கல்லூரி முன்பாக நடைபெற்ற சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. பள்ளி குழந்தைகள் பீர் பாட்டில்களை எடுத்துசெல்லும் நிலை உள்ளது. கட்டுகோப்பாக இருந்த தமிழகம் மதுவாலும், கஞ்சாவாலும் சீரழிந்துள்ளது. காவல்துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளது தமிழகத்தில் வீபரீதத்தை ஏற்படுத்தும்.
மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் புதிது. காவல்துறையினர் கையில் உள்ள லத்தி பூஜை செய்வதற்கா? காவல்நிலையங்களில் நடைபெறும் கட்டபஞ்சாயத்துக்களை தடுக்க வேண்டும். காவல்துறையினர் லத்தியை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் கஞ்சா பயன்படுத்துபவர்கள், குடிப்பவர்கள், வழிப்பறி, பெண்களை இழிவுபடுத்துபவர்களை கட்டுப்படுத்த முடியும்.

சாத்தான்குளம், தூத்துக்குடியில் காவல்துறையினரின் நிகழ்வுகள் தவறு, மேலதிகாரிகளின் தோல்வி அது. ஆய்வாளர்களை நியமிக்க எம்.எல்.ஏ லெட்டர் வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. எனவே மக்களை விட எம்.எல்.ஏ.க்குத்தான் விசுவாசமாக இருப்பார்.
பிரதமர் மோடி 11-ம் தேதி மதியம் மதுரை விமான நிலையம் வருகிறார். பின்பு திண்டுக்கல் காந்திகிராமத்துக்கு செல்கிறார். அங்கு பா.ஜ.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தமிழகம் 5 ஆண்டுகளில் எங்கே செல்லும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு உள்ளது.
குஜராத் தேர்தலில் ஏற்கனவே இருந்ததைவிட ஒரு சீட் கூடுதலாக பெற்று பா.ஜ.க வெற்றி பெறும். அங்கு தமிழர்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வோம். குஜராத், இமாசலப்பிரதேசம் ஆகியவற்றில் பாஜக இமாலய வெற்றிபெறும். அங்கு 2-வது இடத்திற்கு காங்கிரஸா? ஆம் ஆத்மியா என்பதுதான் போட்டியாக இருக்கும்.
ஜனநாயகத்தில் போராட்டம் மட்டுமே தீர்வு. பால்விலை உயர்வை கண்டித்து பால் உற்பத்தியாளர்களை இணைத்து பா.ஜ.க சார்பில் 1,204 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னைக்கு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நிதி வந்துள்ளது. இதனை பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்துவதுதான் அரசின் வேலை. அமைச்சர்கள், மேயர் மாற்றி மாற்றி பேசுகின்றனர். மத்திய அரசின் நிதியை முறையாக பயன்படுத்தவில்லை.
பெரிய அளவிலான மழை பெய்யாத நிலையில் சென்னை தடுமாறுகிறது. திருப்புகழ் ஐ.ஏ.எஸ் மோடியின் அன்பை பெற்று பாடம் கற்றவர். அவரது தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளனர். அதனால் சிறப்பாக பணியாற்றுவார். தமிழக அமைச்சர்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்து குழப்பாமல் இருந்தால் சரி” என்றார்.