சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஜேர்மனி தடை! ஆபத்து உள்ளது எனக் கூறும் அமைச்சர்


இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பல பில்லியன் யூரோ Chips திட்டத்தை வெளியிட்டது

சீன அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் கைகளில் முக்கியமான உள்கட்டமைப்பை விடுவது ஐரோப்பாவின் பொருளாதார அதிகார மையத்தில் அச்சத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது  

சீனாவுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு Chipmaker-ஐ விற்பனை செய்வதை ஜேர்மனி தடை செய்துள்ளது.

ஜேர்மன் பொருட்களுக்கான முக்கிய சந்தையாக சீனா உள்ளது.

குறிப்பாக, வாகன நிறுவனங்களான Volkswagen, BMW மற்றும் Mercedes-Benz ஆகியவற்றுக்கு, ஐரோப்பாவின் உயர்மட்ட பொருளாதாரத்தில் பல வேலைகள் நேரடியாக உறவைச் சார்ந்துள்ளது.

சீன நிறுவனமான Sai Micro Electronics அதன் Swedish துணை நிறுவனமான Silex மூலம் Elmos-யின் Dortmund தொழிற்சாலையை வாங்க முயன்றது.

ஆனால் ஜேர்மன் அரசாங்கம், கொள்முதலானது ஜேர்மனியின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறி, திட்டமிட்ட கையகப்படுத்துதலை நிராகரித்தது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் அதன் பின்னர், ஐரோப்பாவிற்கு முக்கியமான எரிவாயு விநியோகம் குறைந்து வருவது கவலைகளை அதிகப்படுத்தியுள்ளதால், Micro Chip தொழில்துறை ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஜேர்மனி தடை! ஆபத்து உள்ளது எனக் கூறும் அமைச்சர் | German Ministry Blocks Of Computer Chip Sale China

Fernando Gutierrez-Juarez / Picture alliance via Getty Images

இந்த நிலையில் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக்,

‘முக்கியமான உள்கட்டமைப்பு தொடர்பான நிறுவனங்களை கையகப்படுத்துதல் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஆபத்து இருக்கும்போது, நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்’ தெரிவித்துள்ளார்.

மேலும், அபாயங்களைக் குறைப்பதற்கான பிற வழிகள், சில நிபந்தனைகளின் கீழ் கையகப்படுத்துதலை அனுமதிப்பது உட்பட, அடையாளம் காணப்பட்ட ஆபத்துகளை அகற்ற முடியவில்லை என ஜேர்மனி பொருளாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கிடையில் வணிக நாளேடான Handelsblatt, பவேரியாவை தளமாகக் கொண்ட ERS எலெக்ட்ரானிக் நிறுவனத்தின் சீன முதலீட்டாளரால் திட்டமிடப்பட்ட கையகப்படுத்துதலை நிறுத்த ஜேர்மனியும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அப்போது, வர்த்தக ரகசியங்கள் காரணமாக இதுதொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிய ராபர்ட் ஹேபெக், ஜேர்மனி முதலீட்டாளர்களுக்கு திறந்தே இருந்தது. ஆனால் நாங்களும் அப்பாவியாக இல்லை என்று குறிப்பிட்டார்.

Robert Habeck

EPA-EFE/CLEMENS BILAN



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.