தொடர் டிரோல்கள்…. மனதை காயப்படுத்துவதாக ராஷ்மிகா வேதனை

விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்ததில் இருந்து அவர்கள் இருவரையும் இணைத்து வெளியான காதல் செய்திகள், இப்போது அவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியாகி வருகிறது. ராஷ்மிகா இந்தி படங்களில் நடித்து வருவதை அடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் டேட்டிங் செய்து வருவதாகவும் தொடர்ந்து டிரோல் செய்யப்பட்டு வருவதை அடுத்து தற்போது தனது சோசியல் மீடியாவில் அதற்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

அந்த பதிவில், ‛‛கடந்த சில மாதங்களாகவே சில விஷயங்கள் என்னை தொந்தரவு செய்து வருகின்றன. அவற்றை சரி செய்ய வேண்டிய நேரம் இது. இதை சில ஆண்டுகளுக்கு முன்பே நான் செய்திருக்க வேண்டும். ஆனால் தாமதம் ஆகிவிட்டது. என்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியதில் இருந்தே நிறைய வெறுப்பை பெற்று வருகிறேன். நிறைய டிரோல்களால் சூழப்பட்டிருக்கிறேன்.

நான் தேர்வு செய்துள்ள இந்த வாழ்க்கை சிக்கலானது என்பது எனக்கு தெரியும். எல்லோரும் என்னை ஆதரிக்க வேண்டும் என்று கூறவில்லை. பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லலாம். அதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் இப்படி என்னை பற்றி டிரோல் செய்வது சரியல்ல. என்னுடைய பணி ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தான் என்பது எனக்கு தெரியும்.

எனது படங்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியில் தான் எனக்கு அக்கறை உள்ளது. உங்களின் மகிழ்ச்சிக்காகவே நான் கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். ஆனபோதிலும் சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி இல்லாத விஷயங்களை விளம்பரப்படுத்துவது கேலி கிண்டல் செய்வது பைத்தியக்காரத்தனமான கருத்துக்களை வெளியிடுவது என் மனதை காயப்படுத்துகிறது. இது என் வேலையை சரிவர செய்ய விடாமல் தடுக்கிறது.

நான் பேட்டிகளில் சொல்லும் விஷயங்களைகூட எனக்கு எதிராக மாற்றி விடுகிறார்கள். என்னைப் பற்றி விமர்சனங்கள் ஆக்கபூர்வமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தால் நான் அவற்றை வரவேற்கிறேன். காரணம் அது என்னை மாற்றிக் கொள்ளவும் மேம்படுத்தவும் உதவும். ஆனால் இப்போது என்னைப் பற்றி எதிர்பாராத செய்திகள் வெளியாவது எல்லை மீறி வருகிறது. இதை இப்போதும் நான் தெளிவுபடுத்தவில்லை என்றால் தொடர்ந்து இந்த டிரோல் விவகாரம் அடுத்த கட்டத்துக்கு போய்விடும்.

என்னை பலர் நேசிக்கிறார்கள் ஆதரவு அளிக்கிறார்கள். அவர்களின் அன்பும் ஆதரவும் நான் முன்னுக்கு செல்ல உதவுகிறது. அவர்களுக்காகவே இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்களை சந்தோஷப்படுத்துவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று ராஷ்மிகா மந்தனா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.