முட்டை வீச்சுக்கு இலக்கான நொடியில் மன்னர் சார்லஸ் கூறிய அந்த வார்த்தை… பாராட்டும் பொதுமக்கள்


பிரித்தானியாவின் யார்க்ஷயர் பகுதியில் முட்டை வீச்சுக்கு இலக்கான மன்னர் சார்லஸ், அந்த நொடியில் முணு முணுத்த வார்த்தைகளை லிப் ரீடர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

மன்னர் மீது முட்டை வீச்சு

யார்க்ஷயர் பகுதியில் மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி பொதுமக்களை சந்திக்கும் பொருட்டு, நடந்து செல்கையில் இளைஞர் ஒருவர் அவர்கள் மீது முட்டை வீசியுள்ளார்.

மூன்று முறை முயன்றும், அந்த இளைஞருக்கு குறி தப்பியதாகவே தெரியவந்துள்ளது.
மேலும், திரண்டிருந்த மக்களில் சிலர் கடுமையாக கூச்சலிட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

முட்டை வீச்சுக்கு இலக்கான நொடியில் மன்னர் சார்லஸ் கூறிய அந்த வார்த்தை... பாராட்டும் பொதுமக்கள் | Pelted By Eggs King Charles Brave Remarks @getty

கூட்டத்தில் ஒருவர், அடிமைகளில் ரத்தத்தால் கட்டியெழுப்பப்பட்ட நாடு இது என கத்தியது மன்னர் சார்லஸ் காதில் விழுந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது.
இதனிடையே, முட்டை வீசிய இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

மட்டுமின்றி, சம்பவயிடத்தில் இருந்து சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.  

முட்டை வீச்சுக்கு இலக்கான நொடியில் மன்னர் சார்லஸ் கூறிய அந்த வார்த்தை... பாராட்டும் பொதுமக்கள் | Pelted By Eggs King Charles Brave Remarks @getty

மன்னர் சார்லஸ் கூறியது என்ன?

இந்த நிலையில், முட்டை வீச்சின் போது மன்னர் சார்லஸ், பரவாயில்லை, நாம் தொடர்ந்து செல்வோம் என முணு முணுத்ததாக லிப் ரீடர் நிபுணர் ஜெர்மி ஃப்ரீமேன் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நேரம் அதிகாரி ஒருவர் கேட்ட கேள்விக்கு மன்னர் சார்லஸ் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே கைதான இளைஞர் பேட்ரிக் தெல்வெல் மீது பொது ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

முட்டை வீச்சுக்கு இலக்கான நொடியில் மன்னர் சார்லஸ் கூறிய அந்த வார்த்தை... பாராட்டும் பொதுமக்கள் | Pelted By Eggs King Charles Brave Remarks

@gettyy



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.