கடன் வழங்குநர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை! ரணிலுக்கு வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர்


இலங்கை மக்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப நிலையான தனியார் துறையின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கான உலக வங்கி குழுவின் ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தலைவருடன் ரணில் சந்திப்பு

உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் இது தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வழங்குநர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை! ரணிலுக்கு வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர் | President S Meeting With World Bank Chief

அத்துடன், கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக உடன்படுவதற்கு இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு மற்றும் தனியார் துறை கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் (David Malpass) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையின் சவாலான பொருளாதார மற்றும் சமூக நிலைமை மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டிய அவசரத் தேவை குறித்து இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்

தற்போதைய கடன் நெருக்கடிக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள தீர்வுக்கான முக்கியத்துவத்தை உலக வங்கியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கடன் வழங்குநர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை! ரணிலுக்கு வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர் | President S Meeting With World Bank Chief

அத்தோடு, பொதுச் செலவினங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.