வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிங்கப்பூர் சிட்டி: உடல் நலக்குறைவால் அவதிப்படும் ராஷ்ட்ரிர ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்துக்கு அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா சிறுநீரகம் தானம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற, பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்(74), உடல் நலக்குறைவு காரணமாக ஜாமினில் வெளியே வந்துள்ளார். டில்லி மற்றும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர், நீதிமன்றம் அனுமதி பெற்று சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சார்யா, தந்தைக்காக தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எப்போது நடக்கும் என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement