ரஷ்ய மரண தண்டனையிலிருந்து தப்பிய பிரித்தானிய வீரர்..உக்ரைனுக்கு மீண்டும் திரும்புவதாக அறிவிப்பு


நான் இன்னும் செய்ய வேண்டிய வேலையும், கூற வேண்டிய கதைகளும் உள்ளன என அஸ்லின் தெரிவித்துள்ளார்

உக்ரைனில் நான் அடையாளம் காணக்கூடிய முகமாக இருக்கலாம், ஆனால் அந்த ஆபத்திற்கும் மதிப்பு உள்ளது என்று நினைக்கிறேன் – அஸ்லின்    

உக்ரைனுக்காக சண்டையிட்ட பிரித்தானிய வீரர் ஒருவர், மீண்டும் உக்ரைனுக்கு சென்று தனது புதிய பணியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியரான ஐடென் அஸ்லின்(28), உக்ரைனுக்காக பணிபுரியும் சிப்பாயாக செயல்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மரியுபோல் முற்றுகையின்போது அவர் ரஷ்யாவிடம் பிடிபட்டார்.

ரஷ்ய மரண தண்டனையிலிருந்து தப்பிய பிரித்தானிய வீரர்..உக்ரைனுக்கு மீண்டும் திரும்புவதாக அறிவிப்பு | British Soldier Wants Back To Ukraine

அவருக்கு துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சவூதியின் மகுட இளவரசர் Roman Abramovich உதவியால் அதிலிருந்து தப்பினார்.

அதன் பின்னர் பிரித்தானியாவில் உள்ள தனது குடும்பத்துடன் அவர் இணைந்தார்.

இந்த நிலையில் உக்ரைனுக்கு மீண்டு சென்று போர் நிருபராக செயல்பட உள்ளதாக அஸ்லின் தெரிவித்துள்ளார்.

அஸ்லின் தனது யூடியூப் சேனல் மூலம் உக்ரேனிய வீரர்கள், தீயணைப்பு வீரர்களின் கதைகள் மற்றும் உயிர் பிழைப்பதற்கான போராட்டத்தை சந்திக்கும் மக்கள் குறித்து ஆவணப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

ரஷ்ய மரண தண்டனையிலிருந்து தப்பிய பிரித்தானிய வீரர்..உக்ரைனுக்கு மீண்டும் திரும்புவதாக அறிவிப்பு | British Soldier Wants Back To Ukraine

FAMILY HANDOUT/UNPIXS

பிரித்தானியாவின் Nottinghamshire-ஐ சேர்ந்த அஸ்லின், உக்ரைன் மீது கொண்ட அன்புதான் தன்னை மீண்டும் அங்கு செல்ல உந்துதலாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ரஷ்ய மரண தண்டனையிலிருந்து தப்பிய பிரித்தானிய வீரர்..உக்ரைனுக்கு மீண்டும் திரும்புவதாக அறிவிப்பு | British Soldier Wants Back To Ukraine

S Meddle/ITV/Shutterstock



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.