தேசிய விளையாட்டு விருதுகள்: பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது!

தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியலை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வழங்கப்படுகிறது.

அர்ஜுனா விருதுகள்

சீமா புனியா ( தடகளம்), எல்தோஸ் பால் (தடகளம்), அவினாஷ் முகுந்த் சேபிள் (தடகளம்), லக்ஷ்யா சென் (பேட்மிண்டன்), பிரணாய் (பேட்மிண்டன்), அமித் (குத்துச்சண்டை), நிகத் ஜரீன் (குத்துச்சண்டை), பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்), ஆர் பிரக்ஞானந்தா (செஸ்), டீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி), சுஷிலா தேவி (ஜூடோ), சாக்ஷி குமாரி (கபடி), நயன் மோனி சைகியா, சாகர் கைலாஸ் ஓவல்கர் (மல்லகாம்ப்), இளவேனில், ஓம்பிரகாஷ் மிதர்வா, ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), விகாஸ் தாக்கூர் (பளு தூக்குதல்), அன்ஷு (மல்யுத்தம்), சரிதா (மல்யுத்தம்), பர்வீன், மானசி கிரிஷ்சந்திரா ஜோஷி, தருண் தில்லான், ஸ்வப்னில் சஞ்சய் பாட்டீல், ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது.

துரோணாச்சார்யா விருது
ஜிவன்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி கமர் (குத்துச்சண்டை), சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா ஷூட்டிங்), சுஜீத் மான் (மல்யுத்தம்) ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

வாழ்நாள் சாதனையாளர் விருது
ஜஹகர்லாத் (கிரிக்கெட்) விமல் பிரபுல்லா கோஷ் (கால்பந்து) ராஜ்சிங் (மல்யுத்தம்)

தியாசந்த் விருது

அஸ்வினி அக்குஜி (தடகளம் ) தரம்வீர் சிங் (ஹாக்கி) சுரேஷ் (கபடி) நீர் பகதூர் குராங்க்(பாரா தடகளம்)

இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30 ஆம் தேதி நடக்கவுள்ள விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.