குமரியில் 23 இடங்கள் காலி ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்: நாளை கடைசி

நாகர்கோவில்: குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப வினியோகம், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று, நாளை (16ம்தேதி) மாலை 5 மணிக்குள், எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர் 31.10.22 அன்று 18 வயது முடிவு பெற்றவராக இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் இருக்க கூடாது. நல்ல உடல் ஆரோக்கியம் உடையவராகவும், நன்னடத்தை மற்றும் நல்லொழுக்கம் உடையவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

பொது நலத்தொண்டில் ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும். குறைந்தது மூன்று வருடம் பணிபுரிய விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசு ஊழியராகவோ, சுய வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவோ இருத்தல் வேண்டும். ஒரு அழைப்புக்கான ஊதியம் ரூ.560 ஆகும். ஒரு நபருக்கு, ஒரு மாதத்துக்கு 5 அழைப்பு பணி மட்டுமே இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.