ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குடா ராம்சிங் கிராமத்தை சேர்ந்தவர் சலீம் பாய் ராநவாஸ். உடற்கல்வி ஆசிரியரான இவர் ரனாவாஸில் நடந்த உறவினரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது மனமேடையில் உறவினர்களுடன் பாடலுக்கு சலீம் பாய் நடனமாடிக் கொண்டிருந்தார்.
பிறகு அனைவரும் மேடையி விட்டு கீழே இறங்கும் போது திடீரென சலீம் பாய் மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை அருகே இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் திருமண வீடு சோக வீடானது. தற்போது சலீம் பாய் நடனமாடும் போதே சுறுண்டு விழுந்து மரணமடையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்று மகிழ்ச்சியாக நடனம் ஆடும்போது, ஏறக்குறைய 40 வயது தொட்ட நபர்கள் உயிரிழப்பது, கொரோனாவுக்கு பின்னான கடந்த காலங்களில் அதிகரித்து உள்ளது.
மும்பையில் நவராத்திரி விழாவில் கர்பா நடனமாடிய மணீஷ் நராப்ஜி சோனிக்ரா என்பவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு முன்பு ஜம்முவில் நாடக கலைஞர் ஒருவர் மேடையிலேயே உயிரிழந்தார். இப்படி நடனமாடும் போதே அடுத்தடுத்து சிலர் உயிரிழந்துள்ளது பலரையும் பீதியடைய வைத்துள்ளது.