வாஷிங்டன், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணியருக்கு உரிய காலத்தில் டிக்கெட் தொகையை திருப்பித் தராத ‘ஏர் – இந்தியா’ நிறுவனம், 979 கோடி ரூபாய் டிக்கெட் தொகையை, 11.33 கோடி ரூபாய் அபராதத்துடன் செலுத்த அமெரிக்க போக்குவரத்து, துறை உத்தரவிட்டுஉள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுதும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் நம் நாட்டின் ஏர் – இந்தியா நிறுவனமும் பல விமான சேவைகளை ரத்து செய்தது. ஆனால், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் பதிவு செய்திருந்த பயணியருக்கு இதற்கான பணத்தை ஏர் – இந்தியா திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து, அமெரிக்க போக்குவரத்துத் துறையினரிடம் ஏராளமானோர் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போக்குவரத்துத் துறை, ஏர் – இந்தியா நிறுவனம், பயணியருக்கு திருப்பித்தர வேண்டிய 979 கோடி ரூபாயுடன், அபராதமாக 11.33 கோடி ரூபாயை சேர்த்து செலுத்த உத்தரவிட்டுள்ளது.இதேபோல், ‘பிரண்டியர், டாப் போச்சுகல், ஏரோ மெக்ஸிகோ, அவியான்கா’ ஆகிய விமான நிறுவனங்களுக்கும், டிக்கெட் தொகையுடன், அபராத தொகையையும் சேர்த்து வழங்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement