“உள்ளே நுழைந்ததும் நெட்வொர்க் கட் ஆகிடுது”.. 7 ஆண்டுகளாக சென்னை மெட்ரோவில் தீராத பிரச்னை!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனாலும் இன்றளவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மொபைல் நெட்வொர்க் மோசமான நிலையிலேயே தான் இருந்து வருகிறது. இதுகுறித்து, பயணிகள் பலர் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. குறிப்பிட்ட சில நெட்வொர்க் மட்டுமே கிடைக்கிறது என்ற புகாரும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் மெட்ரோ நிலையத்துக்குள் நுழைந்தவுடனே மொபைல் நெட்வொர்க் அணைந்துவிடுகிறது. இதனால் பயனிகள் QR மூலம் டிக்கெட் பெற முடிவதில்லை. ’’மெட்ரோ தொடங்கியத்திலிருந்து திருமங்கலதிலிருந்து LIC வரை சென்று கொண்டிருக்கிறேன். பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் தான் யூஸ் பண்றேன். ஒவ்வொரு நாளும் மெட்ரோ நிலையத்துக்குள் சென்றவுடன் நெட்வொர்க ஆஃப் ஆகிவிடும். இந்த சிமரத்தை மெட்ரோ ரயில் தொடங்கிய நாளிலிருந்தே சந்துத்து வருகிறேன்” என கிளாடிஸ் என்ற பயணி கூறியுள்ளார்.
image
சென்னை மெட்ரோ ரயிலின் முதல் வழி தடம் 2015ம் ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை 41 நிலையங்களில் இயங்குகிறது. இதில் 21 நிலையங்கள் பூமிக்குள் செல்லும் ரயில் வழிதடங்களை கொண்டது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிரிராஜன் கூறுவது, ’ஜியோ, ஏடெல், வொடோபோன் ஆகியவற்றின் சிக்னல் எல்லா மெட்ரோ நிலையங்களிலும் இருக்கிறது. ஜியோ நெட்வொர் தண்டையார் பேட்டை, தியாகராயா கல்லூரில் நிலையங்களில் கிடைக்கிறது.
image
பி.எஸ்.என்.எல் உட்பட பல மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களை தொடர்பு கொண்டுள்ளோம். பயணிகளுக்கு நல்ல நெட்வொர்க் கிடைக்க
முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது’’ என கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அடிதடி, கலவரம்.. என்ன நடந்தது? – வீடியோ Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.